புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (08:00 IST)

கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது… லாபட்டா லேடீஸ் தயாரிப்பாளர் அமீர்கான் மகிழ்ச்சி!

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு பல விருதுகள் அளிக்கப்பட்டாலும், ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருது திரைத்துறையில் மிக உயரியதாக கருதப்படுகிறது.  ஆனால் இது அமெரிக்க படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில்தான் மற்ற நாட்டு படங்கள் கலந்துகொள்ள முடியும்.

இந்திய சினிமாவில் இருந்து இதுவரை ஒரேயொரு படம் மட்டும்தான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு இறுதிச்சுற்றுவரை முன்னேறியுள்ளது. அது அமீர்கான் நடிப்பில் உருவான லகான் திரைப்படம். அதன் பின்னர் பல நல்ல படங்கள் அனுப்பப்பட்டாலும் அவை இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தயாரிப்பாளர் அமீர்கான் “கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. கிரண் ராவ் உள்ளிட்ட படக்குழுவினரை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் படம் ஆஸ்கர் கமிட்டியினரைக் கவரும் என நான் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.