வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (13:51 IST)

"விஸ்வாசம்" ஆப்பு வைக்க துடிக்கும் "அமேசான் ப்ரைம்" - விடுவார்களா அஜித் ரசிகர்கள்?

விஸ்வாசம் படம் குறித்து அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்ட ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.


 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து கடந்த பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக வெளியான படம் விஸ்வாசம் . அஜித்துக்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இப்படம் விவசாயம் , தந்தை - மகள் பாசம் உள்ளிட்டவற்றை மைய கருவாக கொண்டு வெளிவந்து இன்னும் தியேட்டர்களில்  வெற்றிநடை போடுகிறது.
 
இந்நிலையில், தற்போது விஸ்வாசம் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம் அஜித் ரசிகர்களை கடுப்பேற்றி ஒரு ட்வீட் போட்டுள்ளது .

அதாவது , விஸ்வாசம் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா...? என்று கேட்டு அமேசான் பிரைம் வீடியோ ட்வீட் செய்தது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் செம்ம கடுப்பாகிவிட்டனர்.



 
விஸ்வாசம் படத்தின் 100 நாள் வெற்றியை கொண்டாடுவதற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இந்த ட்விட் கோபத்தை வரவைத்ததோடு அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இப்போதே என்ன அவசரம். அமேசான் பிரைமில் வெளியிட வேண்டாம் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 
மேலும் விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட 96 படத்திற்கு நடந்த கொடுமை விஸ்வாசத்திற்கு நடக்க வேண்டாம். கொஞ்சம் காத்திருங்கள் என தல ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.