1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (15:59 IST)

சிம்பு பட நடிகையில் செயலுக்கு குவியும் பாராட்டுகள்….

சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் மன்மதன். இப்படத்தில் மனநல மருத்துவராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மந்த்ராபேடி. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோவில் வில்லியாக நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

அத்துடன் அவர் கிரிக்கெட் வர்ணனையாளரவும், மாடலாகவும், விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் ராஜ் கவுசல் என்ற தயாரிப்பாளரை மணந்துகொண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது, ஒரு பெண் குழந்தையை( 4 வயது ) தத்தெடுத்துள்ளனர்.

இந்தக் குழந்தைக்கு தாரா பேடி கவுசல் என்று பெயர்சூட்டியுள்ளனர்.

மந்த்ரா பேடியில் செயலுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.