திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (15:00 IST)

1 கோடி பார்வையாளர்களைக் கடந்த சூரரைப் போற்று ! வசூல் சாதனை புரிய வாய்ப்பு

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

பிரபல நடிகர் நடிகைகள் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், நேற்று காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு சூர்யா  தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று பட டிரைலரை வெளியிட்டார்.

இந்நிலையில்  நேற்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் 25 மணிநேரத்தில் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டிரைலர் தான் இதுவரை 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற நிலையில் தற்போது சூரரைப் போற்று டிரைலர் அதை முறியடித்துள்ளது.
இப்படம் வசூல் சாதனை புரிய வாய்ப்புள்ளதாகவும்   பேசப்படுகிறது.