1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:37 IST)

செளதி செல்ல புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செட்பம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.Image caption: செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செட்பம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
 
செளதி அரேபியா நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக செளதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியின்படி செளதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
 
இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
 
செளதிக்கு வந்தவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
 
முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.