Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 324 பேர் மரணம்; சிங்கப்பூரில் இருவர் பலி

Written By Prasanth Karthick
Updated: சனி, 21 மார்ச் 2020 (17:37 IST)
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 1,326ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்து.

இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த 75 வயது மூதாட்டியும் இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் கொரோனா பாதிப்பு தாக்கப்படும் முன்பே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,433 பேரும், ஸ்பெயினில் 1,093 பேரும் பலியாகி உள்ளனர்.

இளைஞர்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

இப்படியான சூழலில் இளைஞர்களை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமான ஜெனிவாவிலிருந்து இணையம் மூலமாக உரையாற்றிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், "இளைஞர்களே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல. உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்காக மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் மரணிக்கக் காரணமாக அமையலாம். கவனமாக இருங்கள். வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்," என்றார்.

சர்வதேச அளவில் வயதானவர்கள்தான் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகளவில் பலியாகி இருக்கின்றனர்.

இத்தாலியில் வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் சராசரி வயது 78.

சீனாவில் பலியானவர்களில் 1 சதவீதம் பேர்தான் 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இறந்தவர்களில் 15 சதவீதம் பேர் 80 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்.

எல்லாம் காட்டு

ப சிதம்பரம் ஒரு உண்மையான நக்சல்.. அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்ச்சை பேச்சு...!

தமிழ்நாட்டில் விரைவில் 50 மாவட்டங்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

திடீரென ரூ.22,000 விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் விலை.. லேட்டஸ்ட் விலை என்ன?

பொறியியல் கலந்தாய்வு 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்தது.. 88,930 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு...

சில முக்கிய ரயில்கள் இனி எழும்பூரில் இருந்து கிளம்பாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments