1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash

15% விலை குறையும் சோப்பு, சானிட்டைசர்...

சானிட்டைசர், சோப்பு போன்ற பாதுகாப்பு பொருட்களை 15% விலை குறைத்து விற்கவுள்ளதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இத்தாலி, ஈரான், எகிப்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட நாடுகளுக்கு மிக வேகமாகப் பரவியது. ஆனால், இரண்டு நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என சீன அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. நாளை சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. 
 
மேலும், கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கையாக மக்கள் சானிட்டைசர், முக கவசங்கள் போன்ற மருத்துவ பொருட்களை வாங்க முற்படுகின்றனர். ஆனால் பல கடைகள் அதிக விலைக்கு இதனை விற்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது. 
 
இந்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரன்ங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில், 200 மிலி அளவு கொண்ட கிருமி நாசினியை அதிகபட்சமாக நூறு ரூபாய்க்கு விற்க வேண்டும். அதேபோல சாதாரண முகக்கவசம் 10 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட கூடாது என தெரிவித்துள்ளார். 
 
இதோடு, ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட், கோத்ரெஜ், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் இம்மாதிரியான பொருட்களை அதிகம் உற்பத்தி செய்வதாகவும் அதோடு 15% விலை குறைப்பதாகவும் அறிவித்துள்ளன.