தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி காவல்துறையினர் அவர்களை வீதிகளில் அணிவகுத்துச் அழைத்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை பகுதியில் சட்டவிரோதமாக ஆட்கள் அழைத்து சென்றதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஜிங்சி நகரத்தின் வீதிகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து அணிவகுத்துச் சென்றனர்.
இந்த அவமதிப்பு, அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் உட்பட இணையத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகின.
கடந்த டிசம்பர் 28-ம் தேதியன்று நடந்த சம்பவத்தின் படங்கள் மற்றும் வீடியோவில், நான்கு பேர் பாதுகாப்பு கவச உடை மற்றும் முகக் கவசங்களுடன் நகரின் ஒரு பகுதி வழியாக காவல்துறையினரால் நடத்தி செல்லப்படுவது தெரிகிறது.
அவர்கள் தங்கள் பெயர்களும் புகைப்படங்களும் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்த நிகழ்வை சிலர் பார்ப்பதைக் காண முடிந்தது.
இந்த ஒழுங்கு நடவடிக்கை எல்லை தொடர்பான குற்றங்களைத் தடுத்துள்ளது என்றும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் இணங்குவதை ஊக்குவித்ததாக அரசு நடத்தும் குவாங்சி டெய்லி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் தற்போதைய கோவிட் நிலைமை கடுமையானது எனவும், சிக்கலானது என்றும் மாநில ஊடகங்கள் விவரித்துள்ளன.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் கோவிட்-19 கண்டறியப்பட்ட நாடான சீனாவில், செவ்வாய்கிழமையன்று 203 புதிய பாதிப்புகளும், மொத்தம் 4,849 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. மேலும் அங்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 365 பேருக்கு நோய் தொற்று தாக்கியுள்ளது.
சீனா கடுமையான கோவிட் இல்லா (zero covid) செயல்திட்டத்தை பின்பற்றுகிறது. அந்நாட்டு கூட்டு பரிசோதனை, தொற்று பாதிப்புகளை தடுக்க ஊரடங்கு, மேலும் தீவிரமான தடுப்பூசி திட்டங்களை கொண்டுள்ளது. அதன் மக்கள்தொகையில் 86 சதவீதம் இப்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் அவமதிக்கும் அணிவகுப்பு சமூக ஊடக தளமான வீய்போவில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது. அங்கு அதைப் பற்றிய ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்த பயிற்சியானது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொது வெளியில் அவமதிக்கும் செயலை நினைவூட்டுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் சிலர், இது எல்லைக்கு அருகில் வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான முயற்சிகள் என்று கூறினர்.
"இந்த அணுகுமுறையை ஆதரிக்கும் பல கருத்துக்கள் வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்வதை விட கொடுமையானது" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.
"இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சியின் உணர்வை கடுமையாக மீறுகிறது; இதனை மீண்டும் நடக்க அனுமதிக்க முடியாது" என்று அரசுக்கு சொந்தமான பெய்ஜிங் நியூஸ் கூறியுள்ளது.
ஜிங்சி நகர பொதுப் பாதுகாப்புப் பிரிவும், உள்ளூர் அரசும் இந்தப் பயிற்சியை ஆதரித்துள்ளனர்.
ஆனால், இதனை "எல்லைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை எச்சரிக்கை நடவடிக்கை" என்றும், "பொருத்தமற்ற தன்மை" எதுவும் இல்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் கூறின.
சீனாவில் 2007 ஆம் ஆண்டில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் அணிவகுப்பை அதிகாரிகளின் அறிவிப்பு தடை செய்தது.
கலாசாரப் புரட்சியின் போது பொது வெளியில் அவமதிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. இப்போது மிகவும் அரிதாக நடக்கின்றது. 2006 ஆம் ஆண்டில், சுமார் 100 பாலியல் தொழிலாளிகள், அவர்களது வாடிக்கையாளர்களில் சிலர் மஞ்சள் நிற சிறை ஆடைகளை அணிந்து வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர்.