1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2016 (17:53 IST)

கே பி வழக்கு: இந்தியாவின் ஒத்துழைப்பை பெற நீதிமன்றம் அறிவுறுத்தல்

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப் பட்டுவரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

]

 

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குக்கு இந்தியப் போலீசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 
இந்த வேண்டுகோள் தமது தரப்பால் முன்வைக்கப்பட்டது என ஜே வி பியின் வழக்கறிஞர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தியக் காவல்துறையின் ஒத்துழைப்பை பெற்று வழக்கை விரைவாக முன்னெடுக்குமாறு மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.
 
அவர் விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்த விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரச தரப்பு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.