Daily Horoscope
✕

அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் இரான் குறித்து விழித்து கொள்ள வேண்டும்

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 21 ஜூன் 2021 (11:41 IST)
அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் இரான் குறித்து விழித்து கொள்ள வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

 
இரானின் அணு திட்டத்தை மாற்றியமைக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நஃப்டலி பென்னட், ‘இரானின் கொடூரமாக தூக்கிலும் ஒருவரின் ஆட்சி’ அதிக அணு ஆயுதங்களை விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டை இரான் மறுக்கிறது. இரான் அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து டிரம்பின் ஆட்சியின்போது அமெரிக்கா வெளியேறியது. எனினும் அந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து வருவதாக ராஜீய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் மேலும் சில தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் அதில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் எதிர்க்கிறது. பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும்,ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு இரானின் அதிபர் தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரையீசி வெற்றிப் பெற்றதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments