1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (03:01 IST)

இளம் வயதினர் இறப்பதற்கு எயிட்ஸ் முக்கிய காரணம்

ஆஃப்ரிக்காவில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இறப்பதற்கு எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஒரு பிரதான காரணமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நிறுவனத்தின் தலைவர் அந்தோனி லேக் கூறியுள்ளார்.
 

 
2000 ஆம் ஆண்டிலிருந்து பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கை காட்டிலும் உயர்ந்துவிட்டதாக லேக் கூறியுள்ளார்.
 
தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கின் துவக்கத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
 
உலகாளவிய தொற்று எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது. ஆனால், சமீபத்திய ஐநா அறிக்கை ஒன்று, சில பகுதிகளில் இந்த நோய் ஏற்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.