வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (14:47 IST)

மத்திய பட்ஜெட் 2020: பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள வழிவகை செய்யுமா?

ஜனவரி 1ம் தேதி இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்த பட்ஜெட் நிர்ணயிக்கும் என்பதை விட, பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளாலும் இந்த பட்ஜெட் அதிக கவனம் பெறுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது, ''அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலையை எட்டும் திறன் நமக்கு உள்ளது.'' என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் மொத்த வருவாயைவிட, மொத்த செலவினம் அதிகரிப்பது நிதிப் பற்றாக்குறை எனப்படும். இதில் அரசு வாங்கும் கடன் அடங்காது. 2020 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%ஆக இருக்க இலக்கு வைக்கப்பட்டது. இது ஆறு ஆண்டுகள் வைத்த இலக்கை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, பொருளாதாரத்தை உயர்த்த எந்த வகையில் உதவப்போகிறது என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? அதன் தாக்கங்கள் என்னென்ன ?
கடந்த ஆண்டு பட்ஜெட் பரவலாக பேசப்படவில்லை என்றாலும், சாமானியர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது.

அனைவருக்கும் சமையல் எரிவாயு

கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் உரையின்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சாரமும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எரிவாயுவும் அனைத்து கிராமப்புற இல்லங்களுக்கும் 2022ம் ஆண்டிற்குள் கொண்டு சேர்க்கப்படும் என உறுதியளித்தார். கிராமப்புற போக்குவரத்து திட்டங்களும் வீடுகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் அவர் அறிவித்தார்.

நாடு முழுவதும் கிராமப்பகுதியில் வசிக்கும் கோடிக்கணக்கான குடும்பத்தினருக்கு சிலிண்டர் எரிவாயு வழங்கும் அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் ஆண்டு அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின்படி 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எல் பி ஜி சிலிண்டரை மறுமுறை நிரப்புவதன் எண்ணிக்கை 3.08 ஆக குறைந்துள்ளது, 2018 டிசம்பரில் 3.21ஆக குறைந்துள்ளது. குறைந்த நுகர்வு, சிலிண்டர்களின் விநியோகத்தில் இருந்த கணிசமான தாமதங்கள் ஆகியவை குறித்து பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அதிகாரிகள் சமீபத்திய அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளனர்.

''இந்த திட்டம் அறிவித்தபோது மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டினார்கள், ஆனால் தற்போதைய தரவுகளை வைத்து பார்க்கும்போது சிலிண்டரை மறுமுறை நிரப்பி பயன்படுத்துவதில் மக்கள் ஈடுபாடு காட்டவில்லை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்துகின்றனர்'' என மூத்த பொருளாதார நிபுணர் கவிதா கூறுகிறார்.

கிராமப்புறங்களுக்கு மின்சார உற்பத்தியை கொண்டு சேர்க்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது, ஆனால் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டால் மின்சார உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தியாவின் விநியோக நிறுவனங்கள் 80,000 கோடி கடனில் உள்ளது, எனவே தேவைக்கேற்ப மின்சாரம் வழங்க முடியவில்லை. அதனால் தான் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் கூறும்போது அது குறித்து கருத்து தெரிவிப்பது கடினமாக உள்ளது.

அனைவருக்கும் வீடு

2022ம் ஆண்டிற்குள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு அமைக்க வேண்டும் என அரசாங்கம் இலக்கு வைத்தது. 2021-22 நிதி ஆண்டிற்குள் 19,500,000 வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா குறித்து கட்டுமான நிபுணர் அனுஜ் பூரி பேசுகையில் தற்போதைய அரசாங்கம் மிகைப்படுத்தும் திட்டங்களை அறிவித்ததாக கூறினார்.

ஆனால் உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெற்றிகரமாக 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 11.22 லட்சம் வீடுகளை கட்டிமுடித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் அங்கு 3.62 லட்சம் வீடுகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சரியான நேரத்தில் கட்டுமான திட்டத்தை முடிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது, ஆனால் புதிய மற்றும் பயனுள்ள தொழில்நுட்பங்களைக்கொண்டு ரெடி மேட் கட்டுமானகளை பயன்படுத்தினால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சிறந்த வகையில் கட்டிடங்களை காட்டமுடியும் என்று பூரி மேலும் கூறினார்.

உண்மையில் பொருளாதார மந்தநிலையால் ரியல் எஸ்டேட் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிபால் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பை சேரி செய்ய அரசு 25,000 கோடி ஊக்க தொகையை, நவம்பர் 2019ல் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பால் எந்த முன்னேற்றமும் இல்லை என்று வர்த்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், வரி விதிப்பு மத்தியில், சொந்தமாக விடு வாங்க மக்கள் முன்வரமாற்றார்கள் . எனவே முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு சில சலுகைகள் வாங்கப்பட்டது உண்மையில் நல்ல முயற்சியாக அமைந்தது. இத்துடன் கூடுதலான வேலை வாய்ப்பு வழங்குவது மிகவும் அவசியம். நிறைவேறாமல் நிதி நெருக்கடியால் முடங்கிய கட்டுமான திட்டங்களை கட்டி முடிப்பது மிகவும் அவசியம். எனவே வீடு வாங்க தயாராக இருப்பவர்களுக்கு பயன்படும்.

வேலை வாய்ப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்பு பியூஷ் கோயலின் நிதி நிலை அறிக்கையிலும் கடந்த ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்த 61,084 கோடி ரூபாயும் 60,000 கோடியாக குறைக்கப்பட்டது. முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட சுயதொழில் திட்டங்களுக்கு 515 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

வேலை வாய்ப்பின்மை இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்வியாஸ் பிபிசியிடம் பேசுகையில், "இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது, எனவே 20 வயதான நான்கில் ஒரு பட்டதாரிக்கு வேலை கிடைப்பதில்லை'' என கூறினார்.

ஓய்வூதிய நன்மைகள்

ஆண்டு வருமானம் 1.5 கோடிக்கு கீழ் உள்ள சிறு தொழில் வர்த்தகர்கள் மற்றும் கடை வைத்து வர்த்தகம் மேற்கொள்ளும் கடையின் உரிமையாளர்களுக்கு பிரதான் மந்திரி கரம் யோகி மான் தான் திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பிரதான் மந்திரி கரம் யோகி மான் தான் திட்டம் மிக பெரிய தோல்வி என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொது செயலாளர் பிரவீன் கான்தேல்வால் கூறுகிறார். இந்தியாவில் உள்ள 7 கோடி வர்த்தகர்களில் வெறும் 25,000 வர்த்தகர்கள் மட்டுமே இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறுகிறார். இந்த திட்டம் குறித்த கருத்துகளையும் அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளது.

18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தால் பயனடைய முடியும் என்பதால் தான் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாத ஓய்வு ஊதியமாக 3000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஓய்வு ஊதியம் பெரும் நபர் இறந்துவிட்டால், அவரின் மனைவிக்கு பாதி ஓய்வு ஊதியமாக 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்படும். கணவன் , மனைவி தவிர வேறு யாரும் இந்த ஓய்வு ஊதியத்தை பெற தகுதி பெற மாட்டார்கள். எனவே தான் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.