1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2016 (17:52 IST)

உயர் ரத்த அழுத்தம் பணக்காரர்களுக்கு மட்டுமான குறைபாடா?

ஏறக்குறைய 20 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு மிகப் பெரிய சர்வதேச ஆய்வு, உயர் ரத்த அழுத்தம் என்ற உடல் சார்ந்த குறைபாட்டை இனி பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தொடர்புடையதாகக் கருத முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா, தெற்கு ஆசியா மற்றும் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள் ஆகியவற்றில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில், ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட உயர் வருவாய் நாடுகளில் உயர் இரத்த அழுத்த குறைபாடு சரிந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

குழந்தை பருவத்தில் எடுத்துக் கொள்ளப்படும் மோசமான ஊட்டச்சத்து, குறைந்த அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு ஏழு மில்லியன் மக்களுக்கும் மேலாக உயிரிழக்க காரணமாக உள்ள மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுடன் உயர் இரத்த அழுத்தத்துக்கு தொடர்புள்ளது.