1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (09:50 IST)

அயோத்தி தற்போது எப்படி இருக்கிறது? அங்கு என்ன நடக்கிறது?

இன்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ள அயோத்தி நகரில் இன்று எல்லாப் பக்கத்திலும் ராமர் புகழ் பாடும் மந்திரங்களும், பாடல்களுமே ஒலிப்பதாக கூறுகிறார் அந்த நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் சர்வப்பிரியா சாங்வான்.
 
நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகே உள்ள கடைகளுக்கு மங்கல நிறமாக கருதப்படும் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. எனவே, அயோத்தியின் நிறமே மாறியது போல உள்ளது என்கிறார் அவர்.
 
மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த அடிக்கல் நாட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் மாநில அரசும், அயோத்தி உள்ளாட்சி நிர்வாகமும் ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன.
 
செவ்வாய்க்கிழமை காலை அனுமன் பூஜையோடு தொடங்கி விழா நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார். கொரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
(குறிப்பு:அயோத்தியில் இன்று நடக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் இந்தப் பக்கத்தில் சேர்த்து மேம்படுத்தப்படும். எனவே, இது தொடர்பான செய்திகளைத் தெரிந்துகொள்ள விரும்பும் நேயர்கள் இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது மீண்டும் இந்தப் பக்கத்துக்கு வருகை தாருங்கள்.