புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (08:30 IST)

மார்கழி மாத ராசி பலன்கள் 2023 – கடகம்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் சனி, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
20-12-2023 அன்று சனி பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-12-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-12-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-01-2023 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசி அன்பர்களே, நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசியல் துறையினருக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும்.

பூசம்:
இந்த மாதம் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் நீங்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்புகள் உயரும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;
சந்திராஷ்டம தினங்கள்: டிச 15; ஜன 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: ஜன 04, 05