வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (08:27 IST)

மார்கழி மாத ராசி பலன்கள் 2023 – ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
20-12-2023 அன்று சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-12-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-12-2023 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-01-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப்பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலமாக அமையும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.

பெண்களுக்கு முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். மேற்படிப்பிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிலும் பொறுமை நிதானம் அவசியம். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

ரோகிணி:
இந்த மாதம் உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினர் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காண்பீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: ஜன 06, 07
அதிர்ஷ்ட தினங்கள்: டிச 30, 31; ஜன 01