குருவின் வீட்டில் பிரவேசிக்கும் சூரியன்..! – மகத்துவமான மார்கழி மாதம்!
இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில் பலரும் மார்கழி மாத விரதம் மற்றும் வழிபாடுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
12 தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது மிகவும் விஷேசமானது. கார்த்திகை மாதம் மருமகன் முருகனுக்கு உரியது என்றால், தொடர்ந்து வரும் மார்கழி மாமன் விஷ்ணு பெருமானுக்கு உரித்தது. மென் பனிக்காலமான இந்த மார்கழி மாதம் பெருமாளை வேண்டி விரதம் மேற்கொள்ள சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி வருவதால் முறையான அனுஷ்டானங்களை கடைபிடித்தால் இம்மையிலும், மறுமையிலும் விஷ்ணு பெருமாளின் அருள் தீர்க்கமாக அருளப்படும்.
இந்த மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் பிரவேசிக்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் மார்கழி மாத நாட்களில் விடியற்காலையில் எழுந்து நீராடி விஷ்ணு பகவானை, அவரது அவதாரங்களை தரிசிப்பது நல்ல பலனை தரும்.
மார்கழி மாதம் அதிகாலை வேளைகளில் எழுந்து குளித்து வாசலில் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பதோ அல்லது பூசணி பூ வைப்பதோ சால சிறந்தது. மார்கழி மாதத்தில் அதிகாலை வேளைகளில் பகவானை மனதில் வைத்து பாடப்படும் பஜனைகள் கீர்த்தி மிகுந்தது.
Edit by Prasanth.K