புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (21:05 IST)

பிப்ரவரி மாத பலன் - ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரக நிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உறவினர் மூலம் உதவிகளை எதிர்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.

தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும் பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் அசையா சொத்துவகையில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமற்ற நிலைகளால் அபிவிருத்திக் குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையின்றி செயல்படுவார்கள்.

ரோகிணி:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அரசியல்வாதிகள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பதவியினைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தைப் பெறஇயலும் என்றாலும் போட்டி பொறாமைகளையும் சந்தித்தே ஆகவேண்டும்.

பரிகாரம்:  வெள்ளி அன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23