வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (18:24 IST)

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

கிரகநிலை:
ராசியில் செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -   சுக  ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை குறிக் கோளாக கொண்டு செயல்படும் துலா ராசியினரே இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதக மாக நடைபெறும். எதிர்பாராத பண தேவை உண்டா கும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். எதிலும் இழுபறியான நிலை காணப் படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர் கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப் படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும். பொன் பொருள் சேர்க்கை நடைபெறும். பெரியோர்களின் அன்பும், ஆசியும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பீர்கள்.

சுவாதி:
இந்த மாதம் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும். எதிர்பாராத பண வரவும், தந்தை வழி வர வேண்டிய பாக்கியங்களும் நிறைவாக கிடைக்கப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் உங்களுக்கு கை கொடுக்கும். தொழில் துறையில் உற்சாகமாக செயல் படுவீர்கள். கட்டாயமான முறையில் முந்தைய ஆர்டர்களை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் நல்ல பலன்கள் உண்டு. திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவும். வேலையில் முழுக்கவனத்தை செலுத்துங்கள். சக பணியாளர்களிடம் ஏற்றத் தாழ்வு காண்பிக்க வேண்டாம். எந்த ஒரு வேலையையும் சிந்தித்து செய்யுங்கள்.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31