1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:41 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
சுகஸ்தானத்தில்  குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி சுக ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் விரைய ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் விரைய ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் விரைய ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்: 
முயற்சிகளை முடுக்கி விடும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம்  மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும்.  வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

மகம்:
இந்த மாதம் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். அலைச்சல், டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்துவழியில் லாபங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.
பூரம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்ற மடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுசெய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28