ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

புதன், 31 ஜூலை 2019 (15:32 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - சுகஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் தைரிய ஸ்தான ராசியிலிருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் சுகஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் சுகஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் சுகஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
பிள்ளைகள் மீது அதிக கவனம் கொண்டிருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது.  இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
 
தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.
 
குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம்.  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
 
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
 
அசுபதி:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். 
 
பரணி:
இந்த மாதம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் சற்றே விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில்கூட அனுகூலமான பலனை அடையமுடியும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உற்றார்-உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல்- வாங்கல்களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :