1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

அபான வாயு முத்திரை செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு "மிருத்யு சஞ்சீவி" என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.

இந்த முத்திரை "அபான முத்திரை" மற்றும் "வாயு முத்திரை" இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.
 
இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,
 
நெஞ்சு படபடப்பு குறையும். வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 
 
மூலநோய் குணமாகும். உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
 
சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும். உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். 
 
இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும். உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும்.
 
வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும். இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் அது நீங்கி நெஞ்சு வலி குறையும். இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.