திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம்

பிராணாயமம்=பிராணன்+அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவன்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.
முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான். ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை  மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள்.
 
மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன் மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன்  நோய்வாய்ப்படுகிறான். மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால், பிராணவாயு  அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.
 
மூச்சை உள்ளிழுத்தல் பூரகம் 4 செகண்டுகள்.
மூச்சை தக்கவைத்தல் கும்பகம் 16 செகண்டுகள்.
மூச்சை வெளியே விடல் ரேசகம் 8 செகண்டுகள்.
 
இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல் சாலச் சிறந்தது. இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.
 
இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை. இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது.