1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (18:37 IST)

உயிருடன் கழுதையை புலிகளுக்கு இரையாக்கிய பூங்கா ஊழியர்கள் (வீடியோ)

சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஊழியர்கள் கழுதை ஒன்றை உயிருடன் புலிகளுக்கு இரையாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாநிலத்தில் யான்செங் சஃபாரி பார்க் என்ற விலங்கியல் பூங்கா உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கழுதை ஒன்றை உயிருடன் புலிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் தள்ளி விடுகின்றனர். அந்த கழுதை புலிகளுக்கு இரையாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
விலங்கியல் பூங்கா முதலீட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஊழியர்கள் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு விலங்கியல் பூங்கா சார்பாக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

நன்றி: Ivan Zalogin