திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (18:04 IST)

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் Xiaomi...எகிறும் எதிர்பார்ப்பு

xeomi electric car
உலகின் முன்னணி  எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான  ஜியோமி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் ஜியோமி நிறுவனம் களமிறங்கியுள்ளது.

உலகின் முன்னணி  எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஜியோமி. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான ஸ்மார்ட் செல்போன்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த  நிறுவனத்தின் பொருட்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் ஜியோமி நிறுவனம் களமிறங்கியுள்ளது.

அதன்படி, ஜியோமி  எஸ்.யூ 7, ஜியோமி எஸ்யு7 புரோ, ஜியோமி எஸ்யூ7 மேக்ஸ் என்ற புதிய மாடல்களில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரியில் இவை விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.