புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:17 IST)

5 லட்சத்தை கடந்த அமெரிக்க கொரோனா பலிகள்! – அதிபர் ஜோ பிடன் வருத்தம்!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாய் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்த ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள நடப்பு அதிபர் ஜோ பிடன், முந்தைய ட்ரம்ப் ஆட்சி காலத்தில் கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியதோடு, எதிர் வரும் காலத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளார்.