மிகவும் வெப்பான ஆண்டாக மாறிய 2021! – உலக வானிலை நிறுவனம்!
கடந்த 2021ம் ஆண்டு இதுவரை பதிவான தகவல்களில் மிகவும் வெப்பமான ஆண்டாக உள்ளதாக உலக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பூமியில் நிலவும் வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றங்களை கண்காணித்து தரவுகளை உலக வானிலை நிறுவனம் சேகரித்து வருகிறது. அவ்வாறாக சேமிக்கப்பட்ட தரவுகளில் அதிக வெப்பமான ஆண்டுகளில் முதல் 7 இடத்திற்கு கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
உலக வானிலை ஆய்வுகள், எல் நினோவால் ஏற்படும் மழைப்பொழிவு மற்றும் குளிர் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் கடந்த 2021ம் ஆண்டை விட அதிக வெப்பமான ஆண்டுகள் அடுத்தடுத்து உருவாக வாய்ப்புள்ளதாகவும் உலக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.