திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (22:19 IST)

ஜி-20 மா நாட்டில் ரஷிய அதிபர் கலந்துகொள்ள உலகத்தலைவர்கள் எதிர்ப்பு

ஜிடி-20 மாநாட்டில் ரஷியா பங்கேற்கவில்லை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதியில், இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் ஜி-20  மா நாடு நடக்கவுள்ளது.

இந்த மா நாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பேச உள்ளனர், இந்த நிலையில், ஜிட்-20 மா நாட்டிற்கு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு போர் தொடுக்கக் கூடாது என அமெரிக்க உள்ள நாடுகள் இந்தோனேஷியாவுக்கு எச்சரித்திருந்தன.

ஆனால்,இதை ஏற்க மறுத்த இந்தோனேஷிய அதிபர் ஜோகோ, ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஜீட்-20 மா நாட்டிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

ஆனனால், இந்த மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது, இந்த மாநாடு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஆலோசனைகளை உலகத் தலைவர்கள் வழங்கவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Sinoj