வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (08:52 IST)

உலக பொருளாதார மாநாடு; உலகின் நிலை குறித்து பேசும் பிரதமர் மோடி!

இன்று தொடங்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

உலக பொருளாதார கூட்டமைப்பு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலக பொருளாதார மாநாட்டை சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டும் மே மாதத்தில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக டாவோஸ் செயல்திட்ட மாநாடு என்ற பெயரில் காணொலி வாயிலாக மாநாடு நடைபெறுகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர். உலகின் நிலை என்ற தலைப்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பேச உள்ளார்.