1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (10:03 IST)

காதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்: பெண்போலீஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு!!!

திண்டிவனத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்ஹிந்த் தேவி(39). இவரது கணவர் மாணிக்கவேல். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெய்ஹிந்த்தேவி போலீஸ் வேலைக்கு சேர்வதற்கு முன்னராக தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு வேலைபார்த்து வந்த மாணிக்கவேலை காதலித்து வந்துள்ளார். 
 
2004ஆம் ஆண்டு ஜெய்ஹிந்த்தேவி போலீஸ் வேலைக்கு தேர்வானார். பின்னர் ஜெய்ஹிந்த் தேவி மாணிக்கவேலை திருமணம் செய்துகொண்டார். சப் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெய்ஹிந்த்தேவி சமீபத்தில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
 
இதற்கிடையே கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ச்சியாக மாணிக்கவேல் ஜெய்ஹிந்த் தேவியை மட்டம்தட்டி அவமானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஹெய்ஹிந்த்தேவி வீட்டில் யாருமில்லா நேரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.