புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (16:07 IST)

சசிகலாவுடன் ரகசிய திட்டம் தீட்டும் தினகரன் ?

தேர்தல் பரபரப்பு எல்லாம் ஓய்ந்து விட்டது.  ஆனால் தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் தமிழகத்தில் இருந்த பிரச்சாரங்களும், தலைவர்கள் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது. தேர்தலின் போதுதான் அனைத்து தலைவர்களின் உண்மைகள் எல்லாம் புட்டு புட்டு வைக்கப்படும் என்பது போல அமைந்துவிட்டது இந்த தேர்தல். தமது வெற்றிக்காக அடுத்தவர்கள் மீது சேற்றை அள்ளிப்பூசுவதும் வாடிக்கையானது.

இந்நிலையில் பரிசுப்பெட்டி சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அமமுகவினர் தங்களது கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்போவதாக நேற்று செய்திகள் வெளியானது. இது அதிமுக மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக தமிழ்செல்வன் கூறியதாவது :
 
’தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா அனுமதியின் பேரிலேயே பொறுப்புகள் மாற்றம் நடைபெறுகிறது. சசிகலாவின் ஆலோசனையின் பேரில்தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்.
 
’’அமமுகவை கட்சியாக பதிவு செய்யவுள்ளதால் தினகரனை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். 
 
மேலும் உச்ச நீதிமன்றத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக் கூறினார்கள். அதன் அடிப்படையில் அமமுவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்யவே தினகரனை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் தேர்வு விரைவில் நடைபெறும் ’ என்று தெரிவித்தார். 
 
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர்தான் அமமுகவின் தலைவராக இருப்பார். மேலும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது’’  இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று சென்னை அசோக்நகரில் அமமுகவின் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட தினகரன் கூறியதாவது :
 
’வரும் காலத்தில் சட்டரீதியான போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அக்கட்சியை அமமுகவுடன் இணைப்போம். ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை’  கட்சியாக பதிவு செய்ய கட்சி தொண்டர்களிடம் பிரமாணப்பத்திரம் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் சிறையில் உள்ள  சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் தினகரன். தன் கட்சியை( அமமுக ) திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரிய அளவில் வளர்த்தெடுக்கும் விதத்தில் தான் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக அவர் இறங்கி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 
இதற்குக்  அமமுக கட்சி தொண்டர்கள் தாங்கள் தலைவர்களாகக் கருதுகின்ற தினகரன் -  சசிகலா ஆகியோருடனிருந்து ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! இதற்குக் காலம் தான் விடை சொல்லும்.