குழந்தைக்கு அருகில் படுத்திருந்த பேய்?! – வைரல் புகைப்படத்தின் உண்மை பிண்ணனி!

ghost
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 22 அக்டோபர் 2019 (17:31 IST)
தன் குழந்தை அருகே பேய் குழந்தை ஒன்று படுத்திருப்பதாக பெண் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் பலரை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மரிசா எலிசபத் என்பவர் தனது மூன்று வயது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்து கொண்டு திரும்பியுள்ளார். அப்போது பாதுகாப்புக்காக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவர் பார்த்த காட்சி அவருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டிலில் அந்த குழந்தை அருகே அமானுஷ்யமாக அலறும் தோனியில் ஒரு குழந்தை படுத்து கிடந்திருக்கிறது. இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த எலிசபத் ஓடிச்சென்று தன் குழந்தையை தூக்கி கொண்டு திரும்பி பார்க்காமல் அடுத்த அறைக்கு ஓடிவிட்டார். இரவு முழுவதும் தூக்கம் வராமல் அந்த பேய் குறித்தே யோசித்திருந்திருக்கிறார் எலிசபத்.

விடிந்ததும் குழந்தை தூங்கிய அறைக்கு சென்று நோட்டமிட்டவர் தன் முட்டாள்தனத்தை தன்னை தானே நொந்துகொண்டார். குழந்தைக்கு புதிதாக வாங்கி படுக்கையில் ஒட்டப்பட்டிருந்த குழந்தை ஸ்டிக்கர் ஒன்று பிரிக்காமல் அதிலேயே ஒட்டியிருந்திருக்கிறது. அதை கவனிக்காமல் மெத்தை விரிப்பை அதன் மேல் போட்டு குழந்தையை படுக்க வைத்திருக்கிறார்கள். சிசிடிவி கேமிராவில் மெத்தை விரிப்புக்கும் கீழே இருந்த ஸ்டிக்கரில் உள்ள குழந்தை உருவம் மேலே தெரிய, அதை கண்டுதான் எலிசபெத் பயந்திருக்கிறார்.

தனது இந்த மோசமான அதேசமயம் நகைப்புக்கிடமான இந்த சம்பவத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார் எலிசபத். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :