புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (07:20 IST)

விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் பைலட்

பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின்  பிரபல பாடகர் டிரேக்  ஸ்கார்பியன்  இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அதில்  இடம்பெற்ற 'கிகி' பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த பாடலுக்கு அமெரிக்காவை சேர்ந்த ஷாகி என்ற காமெடி நடிகர் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
 
இதையடுத்து ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். 
 
கிகி சேலஞ்ச் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்பதால், கிகி சேலஞ்சில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அப்படி மீறி நடமாடுவோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
 
இந்நிலையில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது சக ஊழியருடன் நகரும் விமானத்திலிருந்து இறங்கி கிகி நடனம் ஆடியுள்ளார்.
 
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொறுப்பற்று நடந்து கொண்ட அந்த பெண் விமானிகளுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.