ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (08:06 IST)

உள்ளாடை விளம்பரங்களில் பெண் மாடல்கள் நடிக்க கூடாது: அரசின் அதிரடி உத்தரவு..!

model2
உள்ளாடை விளம்பரங்களில் பெண் மாடல்கள் நடிக்க கூடாது: அரசின் அதிரடி உத்தரவு..!
 உள்ளாடை விளம்பரங்களில் பெண் மாடல்கள் நடிக்க கூடாது என சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாடை விளம்பரங்களில் பெண்கள் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பெண்களின் விளம்பரங்கள் ஆபாசமாக இருப்பதாக காரணம் கூறிய சீன அரசு, பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சீனாவில் தற்போது பெண்களின் உள்ளாடைகளுக்கு கூட ஆண்களையே மாடல்களாக பயன்படுத்தி விளம்பரங்கள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
ஆபாச ரீதியான விளம்பரங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தாலும் சீனாவில் உள்ள பெண் மாடல்களின் வேலை வாய்ப்பு இதனால் பறிபோகிறது என்று பெண்கள் நல அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva