ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (14:02 IST)

சிறைக்கைதியுடன் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி கைது..!

சிறையில் இருந்த கைதியுடன் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடந்துள்ளது. 
 
இங்கிலாந்து நாட்டில் 21 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மெக்ஸ்வினி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவருக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த அந்த குற்றவாளியுடன் சிறை பெண் ஊழியர் உல்லாசமாக இருந்ததாக கூறப்பட்டது/ இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்ததை அடுத்து அந்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். 
 
கைது செய்யப்பட்ட அந்த பெண் அதிகாரி யார் என்பதை லண்டன் சிறைச்சாலை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை என்றும் ஆனால் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva