திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (09:09 IST)

அரசு பள்ளியில் ஆபாச படம் போட்ட ஆசிரியர் கைது!

crime
அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஆபாச படத்தை திரையிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பொதுவெளியில் திரைகளில் திடீரென ஆபாச படம் திரையிடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக சில ரயில் நிலையங்களில் பயணியர் பார்க்கும்  எல்சிடி திரையில் ஆபாச படம் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதுபோன்ற சம்பவம் அரசு பள்ளி ஒன்றிலும் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தனது போனை எல்சிடி திரையுடன் கனெக்ட் செய்து மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமான வீடியோக்களை ஒளிபரப்பி வந்துள்ளார். அப்போது அதில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர். பள்ளியில் ஆபாச படம் திரையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K