ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (10:49 IST)

உறவு கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்காத இளைஞர் மீது ஆசிட் வீசிய 36 வயது பெண்

உறவு கொண்ட பின் திருமணத்துக்கு சம்மதிக்காததால், 36 வயது பெண் ஒருவர் 24 வயது இளைஞர் மீது ஆசிட் வீசியதால் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

 
பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணிடம், வீசிட் வீச்சுக்கு உள்ளான வாலிபர் உறவு கொண்டிருந்துள்ளார். ஆனால் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த அப்பெண் அவர் மேல் ஆசிட் வீசியுள்ளார்.
 
ஆனால், ஆசிட் வீச்சிற்கு உள்ளான வாலிபரின் தந்தை கூறுகையில், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், தனது மகனை எவ்வாறு திருமணம் செய்துவைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
 
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஆசிட் தாக்குதல் பொதுவான ஒரு விஷயம். ஆனால் அம்மாதிரியான தாக்குதலுக்கு ஆண்கள் உள்ளாவது மிகவும் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.