ரயிலில் தொங்கி தவித்த பெண்ணை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்
ரயிலில் தொங்கியவாறு தவித்த பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சரியான நேரத்தில் காப்பாறினார்.
மும்பை நல்சோபரா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புறநகர் ரயிலில் 55 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் ஏறினார்கள். முதலில் மகள் ஏறியுள்ளார். அடுத்து அந்த பெண் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டது. இதனால் அவர் வாசல் கதவில் உள்ள கம்பியை பிடித்து தொங்கியுள்ளார்.
இதைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக அந்த பெண்ணை காப்பாற்றினார். ரயிலில் ஒரு சம்ப்வம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. சரியான நேரத்தில் அந்த சப்-இன்ஸ்பெக்டர் பெண்ணுக்கு உதவி செய்யவில்லை என்றால் அவர் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் விழுந்து இருப்பார்.