வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:27 IST)

15 நிமிட இடைவெளியில் 2021 மற்றும் 2022 ல் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிகளுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் 12 நிமிட இடைவெளியில் இரு வேறு ஆண்டுகளில் பிறந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ரூஜிலோ தம்பதிகளுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு குழந்தையும் ஜனவரி 1 ஆம் தேதி ஒரு குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. முதல் குழந்தையான ஆண் குழந்தை டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு பிறக்க, அடுத்த 15 நிமிட இடைவெளியில் அடுத்த குழந்தையான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் இருவருக்கும் வெவ்வேறு நாட்களில்தான் பிறந்தநாள் வரப்போகிறது.