1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (16:58 IST)

RRR பாடலுக்கு ஆட்டம் போட்ட பரத்தின் இரட்டை மகன்கள் - கியூட் வீடியோ!

"பாய்ஸ்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் நடிகர் பரத். அதையடுத்து 'காதல்', 'வெயில்' உட்பட பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு புது நடிகர்களின் வரவுகளால் படவாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டில் பின் தாங்கினார்.
 
இதையடுத்து 2013ம் ஆண்டு ஜெஷ்லி என்பவரால் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இந்த தம்பதிக்கு அழகிய இரட்டை மகன்கள் பிறந்தனர். இந்நிலையில் தற்போது RRR படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr சேர்ந்து நடனமாடி சூப்பர் ஹிட் அடித்த ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு பரத்தின் இரட்டை மகன்கள் நடனமாடிய கியூட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.