வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (08:21 IST)

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

லெபனானில் நடந்த பேஜர் தாக்குதலில் தொடர்புடையவர் என்று கூறப்படும் பிஏசி கன்சல்டிங் நிறுவனத்தின் பெண் சிஇஓ கிறிஸ்டியானா பார்சோனி, தற்போது தலைமறைவாகியுள்ளார்.

சமீபத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் திடீரென ஒரே நேரத்தில் வெடித்ததால் 31 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயங்கர தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் செயல்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலின் உளவு அமைப்பின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, ஹிஸ்புல்லா அமைப்பினர் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக பேஜர்கள் பயன்படுத்தி வந்தனர். இதை அறிந்த மொசாட், ஹங்கேரியின் புடாபெஸ்டில் மூன்று போலி நிறுவனங்களை உருவாக்கியது. அதில் ஒன்றான பிஏசி கன்சல்டிங், தைவானின் கோல்ட் அப்பல்லோ நிறுவனத்துடன் இணைந்து பேஜர்களை தயாரித்து வந்தது. இந்தப் பேஜர்களுக்குள் 3 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தனர்.

ஹிஸ்புல்லா அமைப்பு, இந்நிறுவனத்திடமிருந்து 5,000 பேஜர்கள் வாங்கிய நிலையில், மொசாட் அனைத்துப் பேஜர்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்தது.  இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிஏசி கன்சல்டிங் நிறுவனத்தின் சிஇஓ கிறிஸ்டியானா பார்சோனி தலைமறைவாகியுள்ளார்.

இத்தாலியில் பிறந்து, ஹங்கேரியில் வாழ்ந்து வந்த கிறிஸ்டியானா, ஏழு மொழிகளில் சிறப்பாக பேசக்கூடியவர். அவரை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Edited by Siva