வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:57 IST)

சிந்துவிற்கும் சானியா மிர்சாவிற்கும் கொடுத்த ஊக்கத்தை இவர்களுக்கும் தருவீர்களா?

உடல் ஆரோக்கியம் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்தது.


 

இந்நிலையில், ஊனமுற்றவர்களுக்கான, ஒலிம்பிக் போட்டி, பாராலிம்பிக்ஸ் என்ற பெயரில் செப்டம்பர் 7 முதல் 18 ந்தேதி வரை ரியோடி ஜெனிரோ நகரில் நடக்க இருக்கிறது.

இதில், இந்தியாவை சேர்ந்த 18 வீரர் வீராங்கனைகள் கலந்துக்கொண்டு  தங்கள் ஆற்றலை உலகிற்கு காண்பிக்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்ட நட்சத்திர வீராங்கனைகளான சிந்துவிற்கும் சானியா மிர்சாவிற்கும் இந்திய மக்கள் கொடுத்த அதே ஊக்கத்தை இவர்களுக்கும் கொடுத்து வெற்றி பெற செய்யுங்கள்.