வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (15:51 IST)

ஒமைக்ரான் வைரஸ் மிக மிக கொடியதாக இருக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஒமைக்ரான் வைரஸ் மிக மிகக் கொடியதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவியது என்பது ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் கோடிக்கணக்கான பொருளாதார சேதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் திடீரென ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மீண்டும் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தென் ஆப்பிரிக்கா பிரேசில் ஹாங்காங் சிங்கப்பூர் உட்பட ஒரு சில நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும் விரைவில் இது உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியபோது தென்னாப்பிரிக்காவில் அதிகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நாம் நினைத்ததை விட மிக மிகக் கொடியதாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது