வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (15:14 IST)

2 வருட பாலியல் துன்புறுத்தல்: 11 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்...

சீனாவில் 11 வயது பள்ளி சிறுமி 5 மாத கற்பமாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 
 
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியுள்ளனர்.
 
ஆனால், போலீஸாருக்கு இது குறித்து மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் பள்ளியில் காவலாளியாக பணிபுரியும் ஒருவர்தான் இவ்வாறு செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
50 வயதான அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீஸார் அந்த காவலாளியை கைது செய்துள்ளனர்.