1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Warner bros stop their services in Russia

பேட்மேன் ரிலீஸ் இல்லை.. ரஷ்யாவில் சேவைகள் நிறுத்தம்! – வார்னர் ப்ரதர்ஸ் அறிவிப்பு!

Russia
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வார்னர் மீடியா தனது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, நெட்பிளிக்ஸ், கோகோ கோலா, பெப்சி, ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸும் ரஷ்யாவில் புதிய வணிக ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் கிலர் இதுபற்றி கூறியபோது “இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்கள் உக்ரைன் மக்களுடன் உள்ளன. எங்கள் சேனல்களின் ஒளிபரப்பு, ரஷிய நிறுவனங்களுடனான அனைத்து புதிய உரிமம் மற்றும் எங்கள் நாடகம், கேம் வெளியீடுகளை நிறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார். இதனால் வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்மேன் படம் ரஷ்யாவில் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மாணவர்கள் பெயிண்ட் அடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்களா? – பள்ளி நிர்வாகம் விளக்கம்!