1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (11:49 IST)

திருடன்..திருடன் என கத்திய இந்தியர்கள் ; தெறித்து ஓடிய விஜய் மல்லையா : வீடியோ

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை செலுத்தாமல் இங்கிலாந்து தப்பி சென்றவர் விஜய் மல்லையா. 


 

 
இது தொடர்பாக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் இந்தியாவிற்கு வராமல் அங்கேயே இருக்கிறார். எனவே, அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
 
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணி விளையாடும் போது, விஜய் மல்லையா அங்கு சென்று போட்டிகளை ரசித்து பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியை கான விஜய் மல்லையா வந்தார். அப்போது, அவரை பார்த்த இந்தியர்கள் ‘திருடன்...திருடன்’ என கோஷம் எழுப்பினர். இதைக் கேட்டும் கேட்காததும் போல் விஜய் மல்லையா அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார்.
 
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.