வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூன் 2020 (10:13 IST)

ஒருவர் மரணத்துக்காக 19 பேரை பலி கொண்ட போராட்டம்! – உலகம் முழுவதும் பரவும் போராட்டம்!

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாயிட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்டான போராட்டம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாயிட் என்ற கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டம் தொடங்கியது. மினசொட்டாவில் தொடங்கி அமெரிக்கா முழுவதும் பரவிய இந்த போராட்டத்தால் வாஷிங்டன் வரை பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், புகைக்குண்டுகள் வீசியும் கலைத்து வருகின்றனர்.

பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்து கடைகளை சூறையாடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும் பல இடங்களில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் மகாத்மா காந்தி, கொலம்பஸ் உள்ளிட்டோரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் போராட்டம் பரவியுள்ளது. இதனால் லண்டனில் சிலைகள் பல அரசாங்கத்தால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த போராட்டங்களில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.