ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணை- அமெரிக்கா சோதனை
ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணையை அமெரிக்க சோதனை செய்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எப்போதும் விண்வெளி, அறிவியல்,தொழில் நுட்பம் என பலதுறைகளிலும் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, தற்போது, ஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும்.
இந்த வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.