தொடர்புடைய செய்திகள்
- எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!
- பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?
- டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!
- இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்குவோம்.. டிரம்ப் அறிவிப்பு..!
- இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!
கைகோர்த்தது அமெரிக்கா - சீனா.. 135%ல் இருந்து 30% என வரி குறைப்பு..!
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வரி மோதல் தற்போது நிவர்த்தி அடைய தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்து வந்த நிலையில், தற்போது அந்த நிலைமை மாற தொடங்கியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரியை குறைக்க சில கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்பட்டது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி விதித்து பதிலடி கொடுத்தது.
இதனால், 66,000 கோடி டாலருக்கு மேலான இரு நாடுகளுக்கிடையேயான வாணிபம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வரிகளை குறைக்கும் முடிவை இரு நாடுகளும் எடுத்துள்ளன. சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 145% வரி, இப்போது 30% ஆக குறைக்கப்பட உள்ளது. அதேபோல், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்திருந்த 125% வரியை 10% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த முக்கிய அறிவிப்பு மே 14-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஜெனீவாவில் ஐ.நா. தூதரகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்துடன் இந்த தீர்வு உருவானதாக செய்தி வெளியாகியுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
