1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (06:47 IST)

பெண்கள் சமத்துவ நாள்: உலகம் முழுவதும் கொண்டாட்டம்!

பெண்கள் சமத்துவ நாள்: உலகம் முழுவதும் கொண்டாட்டம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 26-ஆம் தேதி பெண்கள் சமத்துவ நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாள் இதுதான் என்பதால் இந்த நாளை நினைவு கூறும் விதமாக ஆகஸ்டு 26-ஆம் தேதி உலக சமத்துவ நாள் என்றுக் கொண்டாடப் பட்டு வருகிறது 
 
1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் நாள் தான் அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களும் பெண்களும் இணையானவர்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவிலும் பெண்கள் சமத்துவ நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் பெண்கள் இந்த நாளை போற்றிக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஓட்டுப் போடுவதில் மட்டும் பெண்களுக்கான சமத்துவம் இல்லை என்பதும் சமூகநீதி பிரச்சினைகளிலிருந்து வில்க்கு போன்றவைகளும் கிடைக்க வேண்டுமென்றும் ஒரு தாயாக மனைவியாக மகளாக நம் வாழ்வின் பெரும்பகுதியை வழி நடத்தும் பெண்களுக்கான நாளை போற்றி உணர வேண்டும் என்பதற்காகவே இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெண்கள், ஆகஸ்ட் 26, கொண்டாட்டம்,